(செ.கவிஷனா)
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதோடு, கைதிகளின் நலன்களை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதோடு கைதிகளின் நலன்களை உறுதி செய்வது குறித்து நேற்று களுத்துறை சிறைச்சாலையை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த புதிய அமைப்பானது, சிறைச்சாலைகளில் ஏதேனும் அசவர நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக கைதிகள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணவும் வழிவகுக்கும். இதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், முப்படை பிரதானிகள், மின்சார சபை, நீர் வழங்கல் சபை, சுகாதாரத் துறை மற்றும் தீயணைப்புப் பிரிவினர் ஆகிய பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
இக்குழுக்கள் குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒருமுறையாவது கூடி சிறைச்சாலை நிலைமைகளை ஆய்வு செய்யும். ஏற்கனவே, சிறைச்சாலைகளில் உள்ள குடிநீர் வசதி குறைபாடுகள், சுகாதாரச் சிக்கல்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் சேவை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன.
மேலும், பிரச்சினைகள் மோதல்களாக மாறுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிந்து தடுப்பதும், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு, நலன்புரிச் சேவைகள் மற்றும் மனித உரிமைகளை முழுமையாக உறுதிசெய்வதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் முதற்கட்டமாக காலி, பூஸ்ஸ மற்றும் மாத்தறை ஆகிய சிறைச்சாலைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து, இந்த புதிய வேலைத்திட்டத்தை அங்கு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM