யானைக் கூட்டத்திற்காக சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டது கடுகதி புகையிரதம்; இந்தியாவில் பெரும் விபத்து தவிர்ப்பு!

Published By: Digital Desk 3

19 Aug, 2026 | 04:58 PM
image

இந்தியாவின் அசாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானைக் கூட்டத்தைப் பாதுகாக்கும் வகையில், ராஜதானி அதிவேக புகையிரதம் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (19) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஹோஜாய் மாவட்டத்தின் லங்கா எல்லைக்குட்பட்ட ஹவாய்ப்பூர் பகுதியில், கிலோமீற்றர் 167/8 பகுதியில் காட்டு யானைக் கூட்டம் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதை வனத்துறை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

இதனை அடுத்து, அவ்வழியாக பயணித்துக்கொண்டிருந்த ராஜதானி அதிவேக புகையிரதத்தின் சாரதிக்கும், லம்டிங் புகையிரத கட்டுப்பாட்டு அறைக்கும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.

எச்சரிக்கையைத் தொடர்ந்து புகையிரதத்தின் வேகத்தைக் குறைத்த சாரதி, யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடக்கும் வரை புகையிரதத்தை நிறுத்தியுள்ளார்.

யானைகள் அனைத்தும் அருகிலுள்ள வனப்பகுதிக்குச் சென்ற பின்னரே புகையிரதம் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான நெகிழ்ச்சியான காணொளியைப் பகிர்ந்த அசாம் வனத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லபருவா, வனத்துறை அதிகாரிகள், புகையிரத ஊழியர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டு அறையினரின் விரைவான ஒருங்கிணைந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்.

அசாமில் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் காணப்படும் நிலையில், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வனத்துறையினரும் புகையிரத அதிகாரிகளும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50
news-image

இந்தோனேசியாவில் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

2026-09-08 10:10:53
news-image

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக...

2026-09-08 09:37:44
news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43