(நமது நிருபர்)
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் நேரடியாக சூரிய ஒளியில் இருப்பது பல்வேறு வெப்பம் சார்ந்த நோய்களுக்கு வழிவகுப்பதுடன், கடுமையான சந்தர்ப்பங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
எல் நினோ காலநிலை நிலைமைகள் தொடர்பில் புதன்கிழமையன்று (19) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா சூரவீர இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தோல் தடிப்புகள், தசைப்பிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வெப்பம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டார். அத்தோடு சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் தொற்றா நோய்கள் அல்லது நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் விவசாயம் உள்ளிட்ட வெளிப்புறத் தொழில்களில் ஈடுபடுபவர்களும் அதிக வெப்பத்தினால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என வைத்தியர் இனோகா சூரவீர தெரிவித்தார்.
குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையான காலப்பகுதியில் வெப்பநிலையும் சூரியக் கதிர்வீச்சும் அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார். நீரிழப்பைத் தடுப்பதற்காக போதுமானளவு தண்ணீர் அருந்த வேண்டும் எனவும், வெப்பத்தினால் ஏற்படும் தோல் பாதிப்புகளைத் தடுக்க தரநிலைப்படுத்தப்பட்ட சருமப் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அருந்துமாறும் அவர் பரிந்துரைத்ததுடன், 'குளிர்ந்த நீர்' என்பது கட்டாயமாக ஐஸ் போன்று குளிர்ச்சியான அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட நீரைக் குறிக்காது என்றும் தெளிவுபடுத்தினார். வெளிர் நிற ஆடைகளை அணிதல், தலையை மூடுதல் மற்றும் உடலில் போதுமானளவு நீர்ச்சத்தைப் பேணுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உரிய அளவில், உரிய நேரத்தில் உட்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நிலவும் கடும் வெப்பநிலையிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்காக கல்வி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் இனோகா சூரவீர தெரிவித்தார். பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்துதல், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துதல் மற்றும் முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருத்தல் போன்ற நடவடிக்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
தற்போதைய கடும் வெப்பநிலையால் ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்களைக் குறைப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM