சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ; ஏனைய அரச ஊழியர்கள் புறக்கணிப்பு - சாமர சம்பத்!

19 Aug, 2026 | 05:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கம், ஏனைய அரச ஊழியர்களை கண்டுகொள்வதில்லை என புதிய ஜனநாயக முன்னணி  உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற நிதிச் சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தை கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பணியாற்றுபவர்களுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றுபவர்களுக்கும் நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

அப்படியென்றால் மற்றைய அரச ஊழியர்கள் எத்தனை வேளை சாப்பிடுகின்றனர். என்ன சாப்பிடுகின்றனர் என்று கேட்கின்றேன். அதேபோன்று சுங்கத்தையும் கவனிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். 

மற்றவர்களை சிறையில் போடுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தை மகிழ்விக்கும் பயணத்திற்கே இவர்கள்  முயற்சிக்கின்றனர். 90 வீதமான அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்திற்கே வாக்களித்துள்ளனர்.

ஆனால் ஒரு தரப்புக்கு கோழி இறைச்சி மற்றைய தரப்பினருக்கு எலும்புத் துண்டுகள் என்பதை போன்றுதான் செயற்பாடுகள் உள்ளன.

அதேவேளை,மகியங்கனையில் 36 பாடசாலைகளில் பதில் அதிபர்களுக்கு வழங்கப்பட்ட 2500 ரூபா மேலதிக கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் அவர்கள் சேவை செய்ய முடியாமல் இருக்கின்றனர். இவ்வாறுதான் அரச ஊழியர்களின் தற்போதைய நிலைமை இருக்கின்றது.

அதேநேரம் வைத்தியர்களின் ஓய்வு வயதை அதிகரித்தால் பிரச்சினையில்லை. ஆனால் நீதிபதிகளின் வயதை அதிகரிப்பது சிக்கலானது.

நீதிபதிகள் வழக்குகள் குவிந்து கிடப்பதால் தலைவலியில் இருக்கின்றனர். அவர்களுக்கு 60 அல்ல 55 வயதிலேயே ஓய்வு வழங்க வேண்டும். அவர்களை ஓய்வுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களுக்கான சலுகைகளை வழங்கி அவர்கள் சுதந்திரமாக செல்ல இடமளிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08