இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

19 Aug, 2026 | 04:45 PM
image

கணவன் உயிரிழந்த இரண்டு நாட்களில் மனைவியும் உயிரிழந்ததையடுத்து, இருவரது உடல்களும் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்பட்ட, மனதை உருக்கும் சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா பகுதியைச் சேர்ந்தவர் குரியன் ஜோசப் (73). இவருடைய மனைவி ஷெர்லி குரியன் (71). ஆரம்பகால வர்த்தகரும், கூரியர் நிறுவன உரிமையாளருமான குரியன் ஜோசப் உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை உயிரிழந்தார்.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக  வெளிநாட்டிலிருந்து உறவினர்கள் கேரளா சென்றிருந்த நிலையில், நேற்று 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, புத்தன்பள்ளிக்குன்னுவில் உள்ள அவருடைய இல்லத்தில் இறுதி பிரார்த்தனைகளுக்காக குடும்பத்தினரும் உறவினர்களும் கூடியிருந்தனர்.

அப்போது, தனது கணவருக்கு இறுதி பிரியாவிடை முத்தம் கொடுத்த ஷெர்லி குரியன், சில நிமிடங்களில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாழ்நாள் முழுவதும் மிகுந்த பாசப் பிணைப்புடன் இருந்த குரியன் ஜோசப் - ஷெர்லி குரியன் தம்பதியர் உடல்கள், பாலாவில் உள்ள புனித ஜோர்ஜ் லாலம் புத்தன்பள்ளி கல்லறை தோட்டத்தில் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஆசிரியர் தினம் : ஆசிரியர்களுக்கு...

2026-09-05 16:54:34
news-image

ஆப்பிரிக்க கண்டத்தின் அளவை துல்லியமாக காட்டும்...

2026-09-05 15:10:43
news-image

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது...

2026-09-05 14:18:16
news-image

கிழக்கு சீனாவில் மண்சரிவு: ஒருவர் பலி,...

2026-09-05 11:43:04
news-image

டெல்லியில் பெண் முதலமைச்சர், மத்திய அமைச்சர்...

2026-09-05 09:12:33
news-image

இந்தோனேசியாவில் நிலப்பரப்பிலும் நிலத்தடியிலும் தீப்பற்றி பரவும்...

2026-09-04 11:58:53
news-image

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280...

2026-09-04 11:50:55
news-image

நேபாள வெள்ளம் ; 09 நாட்களுக்கு...

2026-09-04 11:15:34
news-image

வியட்நாமில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11...

2026-09-04 09:02:41
news-image

சத்தியம் செய்யுங்கள் : எதிர்க்கட்சிகளுக்கு தமிழக...

2026-09-03 16:58:19
news-image

பிலிப்பைன்ஸில் முழங்கால் அளவு வெள்ளத்தில் நடந்த...

2026-09-03 16:33:34
news-image

56 பேரை 16 விநாடிகளில் தாண்டி...

2026-09-03 16:39:32