தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்கள் மூன்றாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்போது, அவர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தற்போதைய நடைமுறையின்படி, முதல் மற்றும் இரண்டாவது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு தலா 365 நாட்கள் முழு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேவேளை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிருடன் உள்ள குழந்தைகளைக் கொண்ட பெண் ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மூன்றாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கும் புதிய முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டசபையில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் டி. சரத்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் நலன் மற்றும் அதிகாரமளித்தலை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு கடந்த காலங்களில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு 90 நாட்களில் இருந்து ஆறு மாதங்களாகவும், 2016ஆம் ஆண்டு ஒன்பது மாதங்களாகவும், 2021ஆம் ஆண்டு 365 நாட்களாகவும் மகப்பேறு விடுப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
தற்போது மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு விடுப்பு வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பணிபுரியும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஆதரவு தொடர்பான விவாதங்கள் தமிழகத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டசபை கூட்டத்தொடரின்போது தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆர். பல்லவி தனது பிறந்த குழந்தையுடன் சட்டசபைக்கு வந்திருந்த சம்பவமும் இதுதொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் இருந்து ஆர். பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM