தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வயது முதிர்ந்த ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு

19 Aug, 2026 | 04:29 PM
image

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று செவ்வாய்க்கிழமை (18) தனது 30 ஆவது வயதை நெருங்கிய நிலையில் உயிரிழந்துள்ளது.

தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் தகவலின்படி, உயிரிழந்த ஒட்டகச்சிவிங்கிக்கு முன்னதாக குறிப்பிட்ட எந்தவொரு நோயும் கண்டறியப்படவில்லை.

ஆரம்பகட்ட அவதானிப்புகளின் அடிப்படையில், வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட இயற்கையான காரணங்களால் அது உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக இன்று (19) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பொதுவாக, ஒட்டகச்சிவிங்கிகள் இயற்கைச் சூழலில் சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. எனினும், கட்டுப்படுத்தப்பட்ட மிருகக்காட்சிசாலைச் சூழலில் அவை இதைவிட நீண்ட காலம் உயிர்வாழக்கூடியவை என தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், மேலும் இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் இரண்டு புதிய ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் இந்த விலங்கு பரிமாற்றத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20