சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும், பின்னர் பதவியில் இருந்து நீக்கியதும் தவறு - சுஜீவ சேனசிங்க

19 Aug, 2026 | 04:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்தது தவறு. ராஜபக்ஷர்களுக்கு சார்பாக அவர் செயற்படாத காரணத்தால் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதுவும் தவறு.ராஜபக்ஷர்களை போலவே இந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களும் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்கள். 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் நாட்டுக்கும், நாட்டின் எதிர்காலத்துக்கும் பாரதூரமான வகையில் விளைவுகளை ஏற்படுத்தும் திருத்தமாகும்.22 ஆம் திருத்தம் கறுப்பு பேய் அல்ல என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். சிம்பாபே நாட்டில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டவுடன் அங்கு கறுப்பு பேய் எவ்வாறு உருவானது என்பதை ஒரு மாதத்துக்கு முன்னரே நீதியமைச்சருக்கு எடுத்துரைத்தோம்.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையான வகையில் முன்னெடுக்கவில்லை. இரகசியமான முறையில் தான் சகல நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.சட்டத்தின் பிரகாரம் தான் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். கடந்த கால அரசாங்கங்களும் அரசியலமைப்பு திருத்தங்கள் ஊடாகவே ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுத்தது.

ராஜபக்ஷர்களும் இவ்வாறே ஜனநாயக விரோதமாக செயற்பட்டார்கள். சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்தது தவறு. ஜி.எல். பீரிஸின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே அவர் நியமிக்கப்பட்டார். ராஜபக்ஷர்களுக்கு சார்பாக அவர் செயற்படாத காரணத்தால் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.அதுவும் தவறு.

ராஜபக்ஷர்கள் பதவியில் இருக்கும் போது தான்தோன்றித்தனமாக செயற்பட்டார்கள். ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்பட்டார்கள். இந்த அரசாங்கமும் அவ்வாறே செயற்படுகிறது.

ராஜபக்ஷர்கள 20 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்பார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களின் பரம்பரை ஆட்சியில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டது, ஆனால் இரண்டு ஆண்டுக்குள் மக்கள் அவர்களை விரட்டியடித்தார்கள்.22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினால் அதன் விளைவை எதிர்க்கொள்ள அரசாங்கம் தயாராக வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08