இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக் காரணமும் இல்லை - பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மறுப்பு!

19 Aug, 2026 | 04:08 PM
image

(செ.கவிஷனா)

2028 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலளித்துள்ள பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, நாடு மீண்டும் வங்குரோத்து ஆவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால அரசியல் செயற்பாடுகள் காரணமாக நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது உண்மை என்றாலும், தற்பொழுது இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதற்கு எந்தவிதமான அறிக்குறியும் இல்லை என்பது மத்திய வங்கியின் தரவுகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. 2027ஆம் ஆண்டில் நாட்டின் கடன்களைச் செலுத்துவதற்காக மேலும் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, பொருளாதாரத் தரவுகள் பற்றிய சரியான புரிதல் அற்ற தரப்பினரின் அரசியல் பிரசாரங்கள் மட்டுமே என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இலங்கையானது தனது வெளிநாட்டுக் கடன்களை எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாகச் செலுத்தி வருவதுடன், கடந்த 2025ஆம் ஆண்டில் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், நடப்பு 2026ஆம் ஆண்டில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. மேலும், எதிர்வரும் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடனின் அளவு குறைந்து செல்வதுடன், 2027ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய தொகையானது 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மட்டுமே காணப்படுகிறது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ச்சியாக வள்ரவடைந்து வருவதுடன் இந்த ஆண்டின் இறுதிக்குள் அது சுமார் 8 பில்லியன் டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் remittances எனப்படும் வெளிநாட்டுப் பண அனுப்புகைகள், ஏற்றுமதி, முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் என்பன கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டு சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதால், அந்நியச் செலாவணி கையிருப்பை பலப்படுத்திக் கொண்டே கடன்களைச் செலுத்துவதில் எந்தவிதமான சிரமமும் ஏற்படாது என்பதே தற்போதைய பொருளாதார நிதர்சனமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20