(க.சிவலிங்கமூர்த்தி)
முன்வைக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்த விவகாரத்தின் ஊடாக அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு வெளிப்படத் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அநுர அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான பல அமைப்புகளும் நிறுவனங்களும் தமது பலத்த எதிர்ப்பையும் கவலையையும் பதிவுசெய்துள்ளன.
ஜனநாயகக் கொள்கைகள், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றுடன் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட வலுவான காரணங்களை முன்வைத்தே இந்த அமைப்புகள் எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளன. இதனால் இது புறக்கணிக்க முடியாத ஒரு வலுவான எதிர்ப்பாக உருவெடுத்துள்ளது.
நீதி வழங்கும் பொறிமுறையை விரைவுபடுத்துவதற்காகவே இந்தத் திருத்தத்தைக் கொண்டுவருவதாக அரசாங்கம் கூறும் காரணம் முற்றிலும் வேடிக்கையானதும் போலியானதுமாகும்.
உண்மையில் நாட்டில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கும் நீதி விசாரணைகள் தாமதமாவதற்கும் சட்ட மாஅதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் அளவையியல் திணைக்களம் ஆகியவற்றின் நிர்வாக மற்றும் செயற்பாட்டு ரீதியான தாமதங்களே முக்கிய காரணங்களாகும். இது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதுடன் எவ்வகையிலும் தொடர்புபட்டது அல்ல.
இந்த 22ஆவது திருத்தத்தின் ஊடாக அநுர அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு இப்போது மெல்ல மெல்ல வெளியில் வரத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் சர்வாதிகார நிகழ்ச்சி நிரலும், பிரதிநிதித்துவ ஜனநாயகம் மற்றும் தேர்தல்கள் மீதான வெறுப்பும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
1931ஆம் ஆண்டு முதல் சர்வஜன வாக்குரிமை எனும் உன்னதமான ஜனநாயக உரிமையைப் பெற்றுப் பலமடைந்த ஒரு விழிப்புணர்வுள்ள பிரஜைகள் என்ற ரீதியில், நாட்டின் அனைத்துப் பொதுமக்களும் இந்த விவகாரத்தை மிகவும் அவதானமாகவும் நுட்பமாகவும் நோக்குவதோடு, விழிப்படைந்து குரல் எழுப்பவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM