தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Published By: Digital Desk 3

19 Aug, 2026 | 03:43 PM
image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) புதன்கிழமை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கவனம் செலுத்தப்பட்டன. குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரதேச மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடயங்களை தெரிவித்தனர். அவ்வாறே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் மிகவும் பரந்தளவில் முன்வைப்பது மற்றும் அவற்றுக்கான அவசியமான தலையீடுகளைச் செய்வது தொடர்பாகவும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ்.ஏ. வாஸீத், எம்.டி.எம். தாஹிர், துறைராசா ரவிகரன், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.உதுமா லெப்பே, ரவூப் ஹக்கீம், டாக்கடர் இராமநாதன் அர்ச்சுனா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20