மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை – வவுணத்தீவு பகுதியில் மண்முனை மேற்கு பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அபிவிருத்தி முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான காணிகளை விடுவிக்குமாறு சுற்றாடல் துறை அமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின்போது, குறித்த விடயம் தொடர்பாக சுற்றாடல் துறை அமைச்சரிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை – வவுணத்தீவு பகுதியில் மண்முனை மேற்கு பிரதேச சபையினால் பிரதேசத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
எனினும், குறித்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான காணிகளை வனஜீவராசிகள் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள குறித்த அபிவிருத்தி முன்மொழிவை சாதகமாக ஆராய்ந்து, அதற்குத் தேவையான காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
மேலும், குறித்த காணிகளை விடுவிப்பதற்கு பிரதேச சபையினால் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் அமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
தேவையான ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் தெளிவான வழிகாட்டல் வழங்கப்பட்டால், பிரதேச சபையினால் அவற்றை உரிய முறையில் சமர்ப்பித்து காணி விடுவிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடியும் என்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
இதற்கு எழுந்து பதிலளித்த சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தேவையற்ற நிர்வாகத் தாமதங்களால் பாதிக்கப்படாமல், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM