(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். அதனால் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற தகுதி, திறமையுள்ள ஒரு முஸ்லிம் நபரை அந்த குழுவில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நிலையியற்கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்தும் நோக்கில் முன்னெடுத்து வரும் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை நாம் பாராட்டுகின்றோம்.
எனினும், அண்மையில் இடம்பெற்ற சில முக்கிய நியமனங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கவலைகளையும் நியாயமான கேள்விகளையும் எழுப்பியுள்ளன. தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பது நிர்வாக எல்லைகளை வரையறுக்கும் ஒரு தொழில்நுட்ப அமைப்பு மட்டுமல்ல. அது தேர்தல் பிரதிநிதித்துவம், அரசியல் சமநிலை மற்றும் மக்களின் ஜனநாயகப் பங்கேற்புடன் நேரடியாகத் தொடர்புடைய முக்கியமான சுயாதீன நிறுவனமாகும்.
குறிப்பாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படும் போது, அப்பகுதிகளின் வரலாற்றுப் பின்னணி, மக்கள் தொகைப் பரவல், நிர்வாகத் தேவைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை சமநிலையுடன் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இதற்காக ஆணைக்குழுக்களில் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நியாயமான பிரதிநிதித்துவம் இருப்பது முக்கியமானதாகும்.
எனினும், தற்போதைய தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் இடம்பெறாமை அச்சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, முக்கிய தேசிய நிறுவனங்கள் மற்றும் உயர்மட்ட நியமனங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் பிரதிபலிக்கப்படவில்லை என்ற உணர்வும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதே உண்மையான நல்லாட்சிக்கும் தேசிய ஒற்றுமைக்கும் அடிப்படையாகும். அதனடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து தெளிவுபடுத்தல்களை எதிர்பார்க்கின்றேன்,
தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இடம்பெறாதமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
எல்லை நிர்ணய தீர்மானங்களின்போது முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் உரிய முறையில் பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?
எதிர்கால தேசிய ஆணைக்குழுக்கள் மற்றும் உயர்மட்ட நியமனங்களில், தகுதியை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய அரசாங்கம் கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுக்குமா?
அதேநேரம் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதனால் அந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, அறிவுள்ள, துறைசார் நிபுணர்கள் முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறார்கள். அவ்வாறான ஒருவர் அந்த குழுவுக்கு நியமிக்கப்படுகின்றபோது, அந்த குழு அனைத்து சமூகங்களின் கோரிக்கைகளை உள்வாங்கி செயற்படக்கூடியதாக இருக்கும். அதனால் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற தகுதி, திறமையுள்ள ஒரு முஸ்லிம் நபரை அந்த குழுவில் நியமிக்க முடியுமா என கேட்கிறேன் என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM