களுவாஞ்சிகுடியில் வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை: சுகாதார அதிகாரிகளால் நடவடிக்கை!

19 Aug, 2026 | 02:54 PM
image

களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் பொது சுகாதார பரிசோதகர் த.கஜனன் மற்றும் மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினரால் செவ்வாய்க்கிழமை (18)  பலசரக்குக் கடைகள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்கள் என்பன திடீர் பரிசோதனைகளுக்குட்பட்டன.

இதன்போது, களுவாஞ்சிகுடியில் பல சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிவந்த பலசரக்குக் கடை ஒன்று இனம்காணப்பட்டு அக்கடை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சுகாதாரப் பரிசோதகர்களால் முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டது.

குறித்த பலசரக்குக் கடை மிகமோசமான நிலையில் சுகாதார சீர்கேடுகள் நிலவியிருந்த நிலையிலேயே சுகாதாரப் பரிசோதகர்களின் திடீர் பரிசோதனையின்போது இது கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த பலசரக்குக் கடையின் உரிமையாளருக்கு எதிராக வழங்குத்தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடைஉரிமையாளருக்கு மூன்று இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதுடன்,  குறித்த பலசரக்குக் கடையில் காணப்படும் அனைத்துவித சுகாதார குறைபாடுகளையும் பூர்த்தி செய்யப்படும்வரையில் கடையை மூடுமாறும் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி நகரில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள், பொதுச்சந்தை, பலசரக்குக் கடைகள் போன்றன சுகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்பட்டுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20