நாட்டில் இந்த ஆண்டு இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92,854 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய தரவுகளின்படி, டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 0.07 சதவீதமாக காணப்படுவதாகவும், நுளம்புகளால் பரவும் இந்நோயின் ஆபத்து தொடர்ந்து நீடித்து வருவதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டில் ஜனவரியில் 7,866 பேரும், பெப்ரவரியில் 5,721 பேரும், மார்ச்சில் 6,013 பேரும், ஏப்ரலில் 5,651 பேரும், மேயில் 8,590 பேரும் பதவாகியுள்ளனர்.
ஜூனில் 21,533 பேரும், ஜூலையில் 29,964 பேரும், ஆகஸ்டில் 7,516 பேரும் பதிவாகியுள்ளனர். இதில், ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள மாவட்டங்களில் கம்பஹா முதலிடத்தில் உள்ளது. அங்கு 19,778 பேர் (21.30%) பதிவாகியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கொழும்பில் 18,433 பேர் (19.85%) மற்றும் கண்டியில் 6,695 பேர் (7.21%) பதிவாகியுள்ளனர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், நாடளாவிய ரீதியில் 96 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிதீவிர ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனிடையே, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணி, நீர் தேங்கும் இடங்களை அகற்றுவதுடன், நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM