(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
யுத்த காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறாதவர்கள், மீண்டும் நாட்டுக்கு வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதற்கமைய செயற்படுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின் அவர்கள் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
யுத்தக் காலத்தின்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறாதவர்கள், மீண்டும் நாட்டுக்கு வரும்போது எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அதற்கமைய செயற்படுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வகையில் நாட்டை விட்டுச் செல்லாதவர்கள் மீண்டும் நாட்டுக்கு வரும்போது அவர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டார்கள். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சட்டத்துக்கு அமைவாகவே அவ்வாறு செயற்பட்டது. தற்போதைய தீர்மானத்துக்கமைய புதிய திருத்தங்களை முன்னெடுக்க உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின் அவர்கள் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவித்து தாம் இலங்கை பிரஜை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதனைத் தொடர்ந்து அரச புலனாய்வு சேவை பிரிவு ஊடாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து அவர்களால் இலங்கைக்கு வருகைதர முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த பல கேள்விகளுக்கு நீதி அமைச்சுடன் கலந்துரையாட வேண்டும். ஆகவே இதற்கு பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் கோருகிறேன். அதனைத் தொடர்ந்து முழுமையான பதிலளிக்கிறேன் என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM