(நமது நிருபர்)
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் பெண் சிற்றூழியர்களின் ஆடை தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலை மற்றும் அதனால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய மனக் கசப்புகள் குறித்து ஆராயும் ஆலோசனைக் கூட்டமொன்று கடந்த திங்கட்கிழமை (17) கல்முனையில் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கல்முனை கிளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு அதன் தலைவர் அஷ்-ஷெய்க் ஏ.எல். முஹம்மட் முர்ஷித் (முப்தி) தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தற்போது நிலவும் சூழல், வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகளின் போக்குகள், அங்கு பணிக்குச் செல்லும் முஸ்லிம் ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வைத்தியசாலை என்பது பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சேவையாற்றும் அரச நிறுவனமாக இருப்பதால், அங்கு கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் அரச சுற்றறிக்கைகளுக்கு அமைவாக செயற்படும் அதேவேளை அவர்களது உரிமைகள், நாட்டில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாசார நம்பிக்கைகள், அடையாளங்களை பின்பற்றுவதற்கான அனுமதியும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
கல்முனை வைத்தியசாலை விவகாரத்தை தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாறாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் இங்கு அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்வது குறித்தும், தமது அடையாளங்கள், உரிமைகளை பாதுகாக்கின்ற விடயத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் சேவைகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவதுடன், தற்போதைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதுமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிர்வாகிகள், பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபையினர், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், கல்விமான்கள், சட்டத்தரணிகள், துறைசார் புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM