இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் புதன்கிழமை (19) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பங்களாதேஷ் பிரஜைகள் உட்பட 09 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்கத்தாவின் நியூ மார்க்கெட் பகுதிக்கு அருகிலுள்ள 'மிர்சா காலிப் வீதியில்' அமைந்துள்ள மலிவு விலை ஹோட்டலிலேயே அதிகாலை 2:00 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹோட்டலில் இருந்த ஏர் கண்டிஷனர் ஒன்று வெடித்ததே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. மின்சாரக் கசிவு காரணமாகவும் தீப் பரவியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டலின் இரண்டாவது மாடியில் ஆரம்பித்த தீ, கட்டிடம் முழுவதும் வேகமாகப் பரவி அடர்ந்த புகைமூட்டத்தை ஏற்படுத்தியமையால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் வெளியேற முடியாமல் கழிவறைகளிலும் அறைகளிலும் தஞ்சமடைந்த நிலையில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஏணிகளைப் பயன்படுத்தி ஜன்னல்கள் வழியாக சுமார் 60 முதல் 80 பேரைக் காப்பாற்றி வெளியேற்றியுள்ளனர்.
உயிரிழந்த 9 பேரில் 6 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 1 குழந்தை அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவச் சிகிச்சைக்காகக் கொல்கத்தா வந்திருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பிரஜைகளும் இத்தீ விபத்தில் உயிரிழந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், உயிரிழந்தோரின் தேசிய அடையாளங்களை உத்தியோகபூர்வமாக முழுமையாக உறுதிப்படுத்தும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM