வைத்திய உதவியாளர்களின் ஆடை தொடர்பான சர்ச்சைக்கு, இடமாற்றம் ஒரு தீர்வாக அமையாது என முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.
கண்டியில் வைத்து அவர் ஊடகங்களுக்கு இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை வைத்தியசாலையில் வைத்திய உதவியாளர்களின் ஆடை தொடர்பாக உருவான சர்ச்சைக்கு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நியாயமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வொன்றை வழங்குவதற்குப் பதிலாக, இடமாற்றத்தை தீர்வாக முன்வைத்திருப்பது நிர்வாக இயலாமையை தெளிவாகக் காட்டுகிறது.
ஒரு கலாச்சார ஆடை தொடர்பான நிர்வாகப் பிரச்சினை, இன்று ஒரு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் பிரச்சினையை ஆரம்பத்திலேயே உரிய முறையில் கையாளத் தவறிய நிர்வாக அணுகுமுறையாகும்.
ஒரு பிரச்சினை எழுந்தவுடன் அதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது அல்லது இடமாற்றம் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பல்ல. மாறாக, உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து, சட்டம் மற்றும் நிர்வாக விதிமுறைகள், ஊழியர்களின் உரிமைகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு தீர்வு காண்பதாகும்.
குறிப்பாக, இங்கே இடமாற்றத்தை ஒரு தீர்வாகப் பயன்படுத்தியிருப்பது மிகவும் பிழையான முன்னுதாரணத்தை உருவாக்க்கும். எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற ஒரு வாய்ப்பாகவும் இது அமையும்.
நாளை எந்தவொரு அரச நிறுவனத்திலும் ஒரு கொள்கை அல்லது நடைமுறை தொடர்பாக ஊழியர்கள் கேள்வி எழுப்பினால், அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக இடமாற்றம் செய்வது வழக்கமாகிவிட்டால், அது நல்ல நிர்வாகத்தின் அடையாளமாக இருக்காது. இப்படியான விடயங்களில் அரசாங்கம் மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் தனது முடிவை மீளாய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்த கலாச்சார ஆடைகளை அணிவதற்கான நியாயமான தீர்வொன்றை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM