இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள் தேவை

19 Aug, 2026 | 12:41 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றிபெறுவதற்கு 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மீதம் இருக்க மேலும் 197 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 372 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை, போட்டியின் கடைசி நாளாள இன்றைய தினம் பகல்போசன இடைவேளையின்போது 6 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் சொனால் தினூஷவும் அரைச் சதங்கள் பெற்று இலங்கைக்கு உற்சாகம் ஊட்டினர்.

ஆனால், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து நிரோஷன் திக்வெல்ல 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்ததால் தோல்வியிலிருந்து மிள்வதற்கு இலங்கை கடுமையாக போராட வேண்டியுள்ளது.

பகல்போசன இடைவேளையின் போது சொனால் தினூஷ 65 ஓட்டங்களுடனும் கேஷர நுவன்த 8 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 462 (தேவ்டத் படிக்கல் 167, கே.எல். ராகுல் 82, த்ருவ் ஜுரெல் 51, ரிஷாப் பான்ட் 39, யஷஸ்வி ஜய்ஸ்வால் 31, ப்ரபாத் ஜயசூரிய 109 - 4 விக்., கேஷர நுவன்த 175 - 3 விக்., அசித்த பெர்னாண்டோ 63 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 284 (சொனல் தினூஷ 100, நிரோஷன் திக்வெல்ல 80, லஹிரு உதார 27, தனஞ்சய டி சில்வா 21, மானவ் சுதார் 76 - 4 விக்., ரவிந்த்ர ஜடேஜா 57 - 3 விக்.)

இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 193 (ரிஷாப் பான்ட் 66, தேவ்டத் படிக்கல் 44, கே.எல். ராகுல் 35, அசித்த பெர்னாண்டோ 31 - 4 விக்., ப்ரபாத் ஜயசூரிய 43 - 3 விக்., லஹிரு குமார 28 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 5ஆம் நாள் பகல்போசன இடைவேளையின் போது 175 - 6 விக். (சொனால் தினூஷ 65 ஆ.இ., தனஞ்சய டி சில்வா 59, ப்ராசித் கிரிஷ்ணா 16 - 2 விக்., மானவ் சுதார் 30 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right