சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 மில்லியன் ரூபா வட்டியில்லா கடன் சலுகை!

19 Aug, 2026 | 12:41 PM
image

தற்போதைய சிறுபோக நெல் அருவடைக் காலத்தில் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (17) ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கொள்கையை நடைமுறைப்படுத்தி, விவசாயிகளுக்குத் தமது விளைச்சலுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதையும், நுகர்வோர் நியாயமான விலையில் திறந்த சந்தையில் அரிசியைக் கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் அபிவிருத்தியடைய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஒத்துழைப்புடன், மாவட்ட செயலாளர்கள் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தினால், ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 25 மெற்றிக் தொன் நெல்லை அரிசியாக்கும் திறன் கொண்ட பதிவுசெய்யப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்களும், கூட்டுறவுச் சங்கங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதி பெறுவர்.

இத்திட்டத்தில் பங்கேற்கும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரை வட்டியில்லா சலுகை அடிப்படையிலான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதற்காக, சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தரால் பரிந்துரைக்கப்படும் அளவிலான நெல்லை அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் அந்நிறுவனங்கள் கொள்வனவு செய்ய வேண்டும்.

இதற்கமைய, சிவப்பு மற்றும் வெள்ளை நாடு தரப்படுத்தப்பட்ட நெல் கிலோகிராம் ஒன்று அரசாங்கத்தின் உத்தரவாத விலையான 120 ரூபாவிற்கும், சம்பா தரப்படுத்தப்பட்ட நெல் கிலோகிராம் ஒன்று 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட வேண்டும்.

கடனாக நிதியைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து 240 நாட்களுக்குள் அதனை மீளளிக்க வேண்டும் என்பதுடன், இதற்காக எவ்வித வட்டி, தரகுப் பணம் அல்லது வேறு எந்தக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.

2026 சிறுபோக பருவ நெல் கொள்முதல் திட்டம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், தகுதியுடைய சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு உரிய மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கோள்ளுமாறு அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காரைதீவில் அதிகரித்துள்ள யானைகளின் அச்சுறுத்தல்: உடனடியாக...

2026-09-05 16:27:13
news-image

நாமலின் கைது புதிய விடயமல்ல; பிணை...

2026-09-05 16:36:59
news-image

கீழ் மல்வத்து ஓயா பெயரில் குடியேற்ற...

2026-09-05 16:28:17
news-image

தொலைதூரத் தனியார் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு...

2026-09-05 16:13:20
news-image

கொட்டகலை பாதை அபிவிருத்தியில் ஊழல் குற்றச்சாட்டு:...

2026-09-05 15:59:49
news-image

சிறையிலுள்ள நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று...

2026-09-05 15:51:45
news-image

வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இரு...

2026-09-05 14:55:17
news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02