(நமது நிருபர்)
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து வாகனப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இச்சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல விசேட செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறி ஆசனப்பட்டி இன்றிப் பயணம் செய்யும் நபர்களுக்கு 1,000 ரூபா அபராதம் விதிக்கப்படும்.
அதிவேகப் பேருந்துகளில் பயணிக்கும் போது ஆசனப்பட்டி அணியாத பயணிகளிடமிருந்தும் இந்த அபராதத் தொகையை அறவிடச் சட்ட ரீதியான அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது இடம்பெறும் விபத்துகளில் ஆசனப்பட்டி அணியாமையினால் ஏற்படும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால், அனைவரின் உயிர்ப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சாலைப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன கூறுகையில், ஆசனப்பட்டிகள் இல்லாத வாகனங்களுக்கு அவற்றைச் பொருத்திக் கொள்ள வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலமும் செப்டம்பர் 19 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 2025 செப்டம்பர் 25 ஆம் திகதியிடப்பட்ட 2455/29 இலக்க வர்த்தமாணி அறிவித்தலின் அடிப்படையிலேயே இந்த அதிவேக நெடுஞ்சாலை விதிகள செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM