உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே இருந்த சிறுவனுக்கு அனந்த் அம்பானி உதவி: மும்பை வைத்தியசாலையில் சிகிச்சை!

19 Aug, 2026 | 12:09 PM
image

உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சலினால் கடந்த ஒரு மாதமாக பகல் மற்றும் இரவு நேரங்களை பெரும்பாலும் குளத்திலேயே கழித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானியின் தலையீட்டைத் தொடர்ந்து, விசேட வைத்திய சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத், பெல்தாங்கா பகுதியைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு அரிதான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நீரிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது உடல் முழுவதும் கடுமையான எரிச்சல் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக பெரும்பாலான நேரத்தை குளத்து நீரிலேயே கழிப்பதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார்.

காலை முதல் இரவு வரை குளத்து நீரில் மிதந்தவாறே சிற்றுண்டி உட்கொள்ளும் சிறுவனின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பில் பரவலாக கவனம் செலுத்தப்பட்டது.

வறுமையினால் தனது மகனுக்கு தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறுவனின் பெற்றோர் விடுத்த கோரிக்கையை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்த அனந்த் அம்பானி, சிறுவனை உடனடியாக மும்பைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனை அடுத்து, விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்ட இக்பால், அங்குள்ள சேர் எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் சிறுவனுக்கு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நீண்ட நேரம் நீரில் இருப்பதால் சருமக் கோளாறுகள் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் முன்னணி வைத்திய நிபுணர்களின் உதவியுடன் சிறுவனுக்கான சிகிச்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஆசிரியர் தினம் : ஆசிரியர்களுக்கு...

2026-09-05 16:54:34
news-image

ஆப்பிரிக்க கண்டத்தின் அளவை துல்லியமாக காட்டும்...

2026-09-05 15:10:43
news-image

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது...

2026-09-05 14:18:16
news-image

கிழக்கு சீனாவில் மண்சரிவு: ஒருவர் பலி,...

2026-09-05 11:43:04
news-image

டெல்லியில் பெண் முதலமைச்சர், மத்திய அமைச்சர்...

2026-09-05 09:12:33
news-image

இந்தோனேசியாவில் நிலப்பரப்பிலும் நிலத்தடியிலும் தீப்பற்றி பரவும்...

2026-09-04 11:58:53
news-image

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280...

2026-09-04 11:50:55
news-image

நேபாள வெள்ளம் ; 09 நாட்களுக்கு...

2026-09-04 11:15:34
news-image

வியட்நாமில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11...

2026-09-04 09:02:41
news-image

சத்தியம் செய்யுங்கள் : எதிர்க்கட்சிகளுக்கு தமிழக...

2026-09-03 16:58:19
news-image

பிலிப்பைன்ஸில் முழங்கால் அளவு வெள்ளத்தில் நடந்த...

2026-09-03 16:33:34
news-image

56 பேரை 16 விநாடிகளில் தாண்டி...

2026-09-03 16:39:32