வீதிப் பணியின் போது 4 மனித உடல்களும் 9 மண்டையோடுகளும் கண்டெடுப்பு: இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பு!

19 Aug, 2026 | 11:38 AM
image

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ஷீலாநகர் அருகே வீதி அமைக்கும் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட மண் குவியலை அகற்றி சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மனித உடல்களும் மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷீலாநகர் – சப்பவரம் பகுதிகளை இணைக்கும் புதிய வீதியை துறைமுக வீதியுடன் இணைக்கும் பணிகளுக்காக குறித்த பகுதியில் மண் கொட்டப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மண்ணைச் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் மனித உடல் பாகங்களைக் கண்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், மண் குவியலில் இருந்து இதுவரை 4 மனித உடல்களும் 9 மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காஜுவாகா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வாசு நாயுடு, கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அப்பகுதியில் எவ்வாறு வந்தன என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த உடல்கள் அங்கேயே புதைக்கப்பட்டவையா அல்லது வேறு இடத்திலிருந்து மண்ணுடன் சேர்த்து கொண்டு வரப்பட்டு அங்கு கொட்டப்பட்டவையா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கும் ஷீலாநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிரிக்க கண்டத்தின் அளவை துல்லியமாக காட்டும்...

2026-09-05 15:10:43
news-image

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது...

2026-09-05 14:18:16
news-image

கிழக்கு சீனாவில் மண்சரிவு: ஒருவர் பலி,...

2026-09-05 11:43:04
news-image

டெல்லியில் பெண் முதலமைச்சர், மத்திய அமைச்சர்...

2026-09-05 09:12:33
news-image

இந்தோனேசியாவில் நிலப்பரப்பிலும் நிலத்தடியிலும் தீப்பற்றி பரவும்...

2026-09-04 11:58:53
news-image

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280...

2026-09-04 11:50:55
news-image

நேபாள வெள்ளம் ; 09 நாட்களுக்கு...

2026-09-04 11:15:34
news-image

வியட்நாமில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11...

2026-09-04 09:02:41
news-image

சத்தியம் செய்யுங்கள் : எதிர்க்கட்சிகளுக்கு தமிழக...

2026-09-03 16:58:19
news-image

பிலிப்பைன்ஸில் முழங்கால் அளவு வெள்ளத்தில் நடந்த...

2026-09-03 16:33:34
news-image

56 பேரை 16 விநாடிகளில் தாண்டி...

2026-09-03 16:39:32
news-image

பெருவெள்ளத்துக்குப் பின்னர் திபெத்தில் பூமியதிர்ச்சி

2026-09-03 15:25:56