உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி இறந்துவிட்டதாகக் கூறி வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பம்! - இந்தியாவில் சம்பவம்

19 Aug, 2026 | 11:05 AM
image

“இதோ, நான் உயிரோடு உங்கள் கண் முன் நிற்கிறேன். ஆனால், நான் இறந்துவிட்டதாகக் கூறி எனது மருமகள் போலி ஆவணங்கள் மூலம் வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார்” என 62 வயதான மூதாட்டி முத்துப்பிள்ளை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மதுரை, சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த முத்துப்பிள்ளை, கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனுவொன்றை அளித்துள்ளார்.

உயிருடன் இருக்கும் தன்னை இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, தனது சொத்துக்கள் மற்றும் நகைகளை அபகரிக்கும் நோக்கில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

முத்துப்பிள்ளையின் கணவர் சின்னசாமி கடந்த 2017ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு ராமசாமி மற்றும் பெருமாள் என இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் இளைய மகனான பெருமாள் கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். பெருமாலுக்கும் அவரது மனைவி சுந்தரிக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முத்துப்பிள்ளை உயிருடன் இருந்தபோதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி போலியான இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்த சுந்தரி, தனது கணவர் பெருமாளுக்கு தாய், தந்தை எவரும் இல்லை எனக் குறிப்பிட்டு வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பத்துக்கு கோவில் பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலரும் முறையான களஆய்வு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளாமல் அனுமதி வழங்கியதாகவும் முத்துப்பிள்ளை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முத்துப்பிள்ளையின் மூத்த மகன் ராமசாமி, தனது சகோதரர் பெருமாள் பெயரில் 7 சவரன் தங்க நகைகள் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை மீட்பதற்காக தனது தாயார் வங்கியை அணுகியபோதே, அவர் இறந்துவிட்டதாக சுந்தரி வங்கியிடம் தெரிவித்திருந்தமை தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கிராம நிர்வாக அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில் முத்துப்பிள்ளையும் அவரது கணவர் சின்னசாமியும் உயிரிழந்துவிட்டதாகவும், 11 வயது மகனின் தாய் என்ற அடிப்படையில் சுந்தரியே வாரிசு எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக ராமசாமி தெரிவித்துள்ளார்.

ஆறு பேரின் போலி சாட்சியங்களைப் பெற்று கிராம நிர்வாக அலுவலர் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தங்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சம்பவம் தொடர்பில் கோவில் பாப்பாகுடி கிராம உதவியாளர் மதிவாணன் தெரிவிக்கையில், சுந்தரி சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சுந்தரி வழங்கிய தகவல்கள் தவறானவை மற்றும் போலியானவை எனத் தெரியவந்ததையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் சார்பில் அலங்காநல்லூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கிராம நிர்வாக அலுவலர் முறையான களஆய்வு மேற்கொள்ளாமல் அலட்சியமாகச் செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ள முத்துப்பிள்ளை, அவர் மீதும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஆசிரியர் தினம் : ஆசிரியர்களுக்கு...

2026-09-05 16:54:34
news-image

ஆப்பிரிக்க கண்டத்தின் அளவை துல்லியமாக காட்டும்...

2026-09-05 15:10:43
news-image

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது...

2026-09-05 14:18:16
news-image

கிழக்கு சீனாவில் மண்சரிவு: ஒருவர் பலி,...

2026-09-05 11:43:04
news-image

டெல்லியில் பெண் முதலமைச்சர், மத்திய அமைச்சர்...

2026-09-05 09:12:33
news-image

இந்தோனேசியாவில் நிலப்பரப்பிலும் நிலத்தடியிலும் தீப்பற்றி பரவும்...

2026-09-04 11:58:53
news-image

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280...

2026-09-04 11:50:55
news-image

நேபாள வெள்ளம் ; 09 நாட்களுக்கு...

2026-09-04 11:15:34
news-image

வியட்நாமில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11...

2026-09-04 09:02:41
news-image

சத்தியம் செய்யுங்கள் : எதிர்க்கட்சிகளுக்கு தமிழக...

2026-09-03 16:58:19
news-image

பிலிப்பைன்ஸில் முழங்கால் அளவு வெள்ளத்தில் நடந்த...

2026-09-03 16:33:34
news-image

56 பேரை 16 விநாடிகளில் தாண்டி...

2026-09-03 16:39:32