ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர் காயம்

Published By: Digital Desk 3

19 Aug, 2026 | 09:40 AM
image

தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட 4.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியினால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பெயினின் தேசிய புவியியல் நிறுவனத்தின் தகவலின்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க கிரனாடா நகரத்திற்குத் தெற்கே சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள 'அல்ஹெண்டின்' நகருக்குஅருகில் செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 10:37 மணியளவில் இந்த பூமியதிர்ச்சி மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து வீடுகள் பலமாக அதிர்ந்ததால், பூமியதிர்ச்சி பின்னதிர்வுகளுக்கு அஞ்சி பொதுமக்கள் அலறியடித்தபடி தெருக்களில் தஞ்சமடைந்தனர். கட்டிடங்களின் இடிபாடுகள் மற்றும் கற்கள் விழுந்ததில் பல வாகனங்கள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் அருங்காட்சியகங்கள், நிர்வாகக் கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் மூடப்பட்டன தெரிவிக்கப்படுகிறது.

யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமும், ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் மத்தியகால இஸ்லாமியக் கட்டிடக்கலையின் உலகப் புகழ்பெற்ற சின்னமான அல்ஹம்ப்ரா அரண்மனை பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகக் கிரனாடாவின் மெட்ரோ புகையிரத சேவைகளின் வேகம் மணிக்கு 30 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால் புகையிரதங்கள் தாமதமாக இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் அப்பகுதியில் தொடர்ச்சியாக லேசான பூமியதிர்ச்சிகள் பதிவாகி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சி மிகவும் சக்திவாய்ந்ததாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் நிலப்பரப்பிலும் நிலத்தடியிலும் தீப்பற்றி பரவும்...

2026-09-04 11:58:53
news-image

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280...

2026-09-04 11:50:55
news-image

நேபாள வெள்ளம் ; 09 நாட்களுக்கு...

2026-09-04 11:15:34
news-image

வியட்நாமில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11...

2026-09-04 09:02:41
news-image

சத்தியம் செய்யுங்கள் : எதிர்க்கட்சிகளுக்கு தமிழக...

2026-09-03 16:58:19
news-image

பிலிப்பைன்ஸில் முழங்கால் அளவு வெள்ளத்தில் நடந்த...

2026-09-03 16:33:34
news-image

56 பேரை 16 விநாடிகளில் தாண்டி...

2026-09-03 16:39:32
news-image

பெருவெள்ளத்துக்குப் பின்னர் திபெத்தில் பூமியதிர்ச்சி

2026-09-03 15:25:56
news-image

பஸ்ஸூக்கு முத்தம் கொடுத்து பிரியா விடை...

2026-09-03 13:24:37
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி உட்பட...

2026-09-03 12:23:51
news-image

துருக்கிய கடல் பிராந்தியத்தில் கப்பல்கள் மோதி...

2026-09-03 09:45:07
news-image

சிரிக் நகரில் திருமண நிகழ்வு மீது...

2026-09-02 16:29:04