வியட்நாமின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான வியட்ஜெட் ஏர், இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான தனது நேரடி விமான சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இதற்கான முதலாவது விமானம் நேற்று (18) செவ்வாய்க்கிழமை இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஹோ சி மின் நகரில் இருந்து 169 பயணிகளுடன் புறப்பட்ட VJ-1875 என்ற இந்த முதல் விமானம், நேற்றையதினம் இரவு 9:33 மணிக்குக் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது. விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானத்திற்கு வழக்கமான நீர் மரியாதை அளிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விமானத்தை இலங்கையைச் சேர்ந்த திவங்க சில்வா மற்றும் ரந்தீர் பெரேரா ஆகிய இரு விமானிகள் இயக்கியமை இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானம், சிறு இடைவேளைக்குப் பின்னர் 171 பயணிகளுடன் மீண்டும் ஹோ சி மின் நகரத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
180 பொருளாதார வகுப்பு இருக்கைகளைக் கொண்ட எயார்பஸ் A320 ரக விமானம் பயன்படுத்தப்படுகிறது.
கொழும்பு - ஹோ சி மின் நகருக்கு இடையே வாரத்திற்கு 3 நாட்கள் (செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை) இந்த நேரடி விமான சேவை இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM