சமூக ஊடகங்கள் ஊடாக காணொளி ஒன்றின் மூலம் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, உறுதிப்படுத்தப்படாத போலித் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடாத்தப்பட்டு வருவதாகச் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியும் உறுதிப்படுத்தப்படாத போலித் தகவல்களைப் பரப்பியமை தொடர்பிலேயே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெல்லன்வில - பொரலஸ்கமுவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று (19) புதன்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், அவருக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM