மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்ற  நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்

Published By: Vishnu

19 Aug, 2026 | 06:09 AM
image

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் தலைமையில் நியூசிலாந்து தேசத்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினரின் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை(18)  விடத்தல்தீவு புனித அடைக்கல மாதா தேவாலய வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த மருத்துவ முகாமில் நீரிழிவு நோய் (Diabetes), தைராய்டு (Thyroid) தொடர்பான பிரச்சினைகள்.

பிட்யூட்டரி- (Pituitary) சுரப்பி தொடர்பான, கேபர்கோலின் (Cabergoline) சிகிச்சை தேவைப்படுபவர்கள், ஆஸ்துமா (Asthma / COPD) (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்). (Breathing Problems) சுவாசப் பிரச்சினைகள், இரத்த அழுத்தம் (Blood pressure). உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ நடவடிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும் மருத்துவ பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனையில் தங்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவமனை பதிவு புத்தகத்தை (Clinic book) கொண்டு வர வைத்தியர்கள் கோரியுள்ளனர்.

மேலும் கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்கு கண்ணாடி கண் நோயாளருக்கு வழங்கப்படுகின்றது. குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர். இதன் போது அயல் கிராமங்களில் இருந்தும் பலர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொண்டனர்.

குறித்த மருத்துவ மருத்துவ முகாம் புதன்கிழமை (19) இலுப்பைக்கடவை. அந்தோனியார் புரம் புனித அந்தோனியார் தேவாலய வளாகத்திலும்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20