கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஊடான சந்திப்பு 

Published By: Vishnu

19 Aug, 2026 | 05:55 AM
image

கனடா எல்லைப் பாதுகாப்பு முகமையின் (CBSA) இணைப்பு அதிகாரி திருமதி கசுமி குபோ (Kazumi Kubo) மற்றும் செயல்பாட்டு இணைப்பு உதவியாளர் திருமதி நதீகா சமரக்கொடி ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, அண்மைக் காலங்களில் கனடாவிற்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத புலம்பெயர்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும், அவற்றை எதிர்காலத்தில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பானதும் சட்டபூர்வமானதுமான புலம்பெயர்வின் அவசியம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன், புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் மற்றும் மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சோ. இளங்கீரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20