தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார் சைக்கிள்கள், 20 மின்சார முச்சக்கர வண்டிகள் கொள்வனவு - கௌஷல்யா ஆரியரத்ன

Published By: Vishnu

19 Aug, 2026 | 05:45 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தபால் சேவையை முன்னேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்  இந்த ஆண்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த 165 மின்சார மோட்டார் சைக்கிள்களும் 20 மின்சார முச்சக்கர வண்டிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில்,  இம்ரான் மஹ்ரூப் எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது 647 தபால் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.அவற்றில் உயர் தரத்தில் 52 தபால் அலுவலகங்கள், முதலாம் தரத்தைச் சேர்ந்த 294 தபால் அலுவலகங்கள் மற்றும் இரண்டாம் தரத்தைச் சேர்ந்த 301 தபால் அலுவலகங்கள் உள்ளடங்குகின்றன.

அதற்கு மேலதிகமாக, கிராமிய மட்டத்தில் சேவைகளை வழங்குவதற்காக 3,282 உப தபால் அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அத்துடன் தபால் சேவையில் தற்போது 17,830 நிரந்தர ஊழியர்களும் 1,660 பதிவு செய்யப்பட்ட பதிலீட்டு ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். 

எனினும், தபால் சேவைத் துறையில் மேலும் 7,881  வெற்றிடங்கள் உள்ளன.

வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஏற்கனவே கணிசமான  ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, 21 தபால் அதிபர்கள்  பதவி உயர்வு முறையில் நியமிக்கப்பட்டுள்ளதுடன், திறந்த போட்டிப் பரீட்சையின் ஊடாக 461 தபால் அதிபர்களும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 732 தபால் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 40 சாரதிகளும் 36 உப தபால் நிலைய அதிபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, பதிவு செய்யப்பட்ட பதிலீட்டு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

தபால் விநியோக ஊழியர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட மாதாந்த 200 ரூபா சைக்கிள் கொடுப்பனவு, இந்த ஆண்டு முதல் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவு சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பழுதுபார்ப்பதற்காக வழங்கப்படுவதாகவும். 

தபால் திணைக்களத்திற்குத் தேவையான ஏனைய அனைத்து வசதிகளையும் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புதிய வருமான வழிமுறைகளில் கவனம் செலுத்தி  பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தபால் அலுவலகக் கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல் ஆகிய திட்டங்களுக்காக இவ்வாண்டு 1,200 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. 

அதன் பிரகாரம் அடுத்த ஆண்டில் புதிய தபால் அலுவலக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கும் பராமரிப்புப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53