(செ.சுபதர்ஷனி)
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னவின் சகோதரரும், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான மஹீல் சேனரத்னவை நேற்றைய தினம் (18) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் பிணை நிபந்தனை நிபந்தனைகளை உரியவாறு பூர்த்தி செய்யப்படாமையால், சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (18) கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னவின் சகோதரரான மஹீல் சேனரத்ன, 2010 - 2012 காலப்பகுதியில் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இக்காலகட்டத்தில், ஊழல் குற்றச்சாட்டின்கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (18) காலை மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதிலும் உள்ள மீன் விற்பனை நிலையங்களைக் நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல் நடவடிக்கைகளின் போது, உரிய கொள்முதல் நடைமுறையை பின்பற்றாது, நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்குப் பணிகளை வழங்கியமை மற்றும் அந்நிறுவனங்களுக்குக் கொடுப்பனவுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கமை சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்தது.
கைதான சந்தேகநபர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இரு தரப்பினரால் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலனை செய்த நீதிவான் சந்தேகநபர் வெளிநாடு செல்ல பயனத்தடை விதித்திருந்ததோடு, சந்தேகநபரை தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் விடுவிப்பதாக உத்தரவு பிறப்பித்தார். எனினும் சந்தேகநபரான மஹீல் சேனரத்ன பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யதவரிய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM