மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக் கடை ஒன்று, களுவாஞ்சிகுடி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (18) செவ்வாய்க்கிழமை) அதிரடியாகப் பூட்டப்பட்டுள்ளது.

மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட களப் பரிசோதனையின் போது, குறித்த பலசரக்குக் கடையில் கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பொது சுகாதாரப் பரிசோதகரால் இன்று களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரணை செய்த கௌரவ நீதிமன்றம், கடை உரிமையாளரை 03 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன், இனங்காணப்பட்ட அனைத்து சுகாதாரக் குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை கடையை உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் பூட்டி வைக்குமாறு உத்தரவிட்டது.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் இத்தகைய தொடர் நடவடிக்கைகள், அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM