(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசாங்கம் என்ற அடிப்படையில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஐக்கிய நாடுகள் சபை விடுத்த அறிக்கையில் 'உயர்நீதிமன்றம்' என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய நீதிமன்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே அங்கும் தவறான விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. நாட்டுக்கு தேவையான சட்டங்களை இயற்றும் அதிகாரம் அரசாங்கத்துக்கு உண்டு என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 120ஆக அதிகரிக்கவும், நீதிபதிகளின் பதவிக்காலத்தை 63 வயதாக அதிகரிக்கவும் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக் காலத்தை 67 வயதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை 65 வயதாக அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டு திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 24ஆக அதிகரிக்கவும் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த திருத்தங்களுக்கு தான் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிய அறிக்கை தொடர்பில் அரசாங்கம் என்ற அடிப்படையில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் சபை விடுத்த அறிக்கையில் 'உயர்நீதிமன்றம்' என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய நீதிமன்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே அங்கும் தவறான விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச ஆகியோர் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரையும் பதவி நீக்கினார்கள். ஆகவே நீதித்துறை சுதந்திரம் பற்றி இன்று குரல் கொடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.
ராஜபக்ஷ உட்பட திருடர்களுக்கு எதிரான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுகின்றன. பலர் சிறையில் உள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர் இந்த திருடர்களுக்காகவே குரல் கொடுக்கிறார். அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அரசாங்கத்தை எவ்வழியிலாவது விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அனைத்து பக்கமும் செல்கிறார்.
அரசாங்கம் என்ற நிலையில் உறுதியாகவே செயற்படுகிறோம். அரசாங்கத்தின் முறைமை மாற்றம் சரி. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்தது தவறு என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். யார் இந்த ரணில். இந்த நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு மறைமுகமாக அவர் பொறுப்புக்கூற வேண்டும். ரணிலுக்கு புகழ் பாடும் தரப்பினர்கள்தான் இன்று நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.
அரச நிதியை மோசடி செய்து அதனூடாக பயனடைந்தவர்களை பாதுகாக்கவேண்டிய தேவை எமக்கு கிடையாது. அரசாங்கத்தின் மீது ஊழல்வாதிகள் அவ்வாறான நம்பிக்கையும் வைக்கக்கூடாது. அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாகவே செயற்படுகிறோம் என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM