(நா.தனுஜா)
அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலத்தில் சர்வசன வாக்கெடுப்பைக் கோரவேண்டிய விடயங்கள் எவையும் உள்வாங்கப்படவில்லை என்பதே எமது கருத்து. இருப்பினும் அதனைப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா? அல்லது சர்வதேச வாக்கெடுப்பைக் கோரவேண்டுமா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். அதற்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (18) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரதும் கடுமையான எதிர்ப்புக்களை மீறி அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், அதனை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பைக் கோரவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் என்ன செய்வீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலத்தில் சர்வசன வாக்கெடுப்பைக் கோரவேண்டிய விடயங்கள் எவையும் உள்வாங்கப்படவில்லை என்பதே எமது கருத்து. இருப்பினும் அதனைப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா? அல்லது சர்வதேச வாக்கெடுப்பைக் கோரவேண்டுமா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். அதற்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படும்.
அதேபோன்று மகாநாயக்க தேரர்களுடனான எமது சந்திப்பு தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தம் குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர்.
அதனையடுத்து மகாநாயக்க தேரர்களுக்கு இதுபற்றி நேரில் சென்று விளக்கமளிக்குமாறு என்னிடமும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடமும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அதற்கமைய நாம் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துத் தெளிவுபடுத்திய விடயங்கள் பற்றி கடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது விரிவாக விளக்கமளித்திருந்தேன்.
எமது தெளிவுபடுத்தல்களை அடுத்து இந்தத் திருத்தம் தனியொரு நபரை இலக்குவைத்து, அவரைப் பதவியில் நீடிக்கச் செய்வதற்காகக் கொண்டுவரப்படவில்லை என்பதையும், மாறாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவந்து, நீதித்துறைக் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்காகவே கொண்டுவரப்படுகின்றது என்பதை மகாநாயக்க தேரர்கள் புரிந்துகொண்டனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதம் தொடர்பிலும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மாறாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரே வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எதிர்வரும் செப்டெம்பர் மாதத் தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் விவாதிக்க முடியும் என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM