நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ; பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு

18 Aug, 2026 | 07:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்பை திருப்திப்படுத்துவதற்காகவும், நாட்டை பிளவுபடுத்தி சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமையை அமுல்படுத்தவும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான இந்த திருத்தத்துக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்  சானக மாதுகொட தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஏற்றுமதி  மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு நாட்டை முன்னேற்றமடைய செய்தோம். பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால் பொருளாதார முன்னேற்றத்தின் பலன் நடுத்தர மக்களுக்கு கிடைக்கவில்லை. நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கப்படுகின்றன.

 அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரியை பேச்சுவார்த்தை ஊடாக குறைத்துவிட்டோம் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். இந்த வரி குறைப்புக்காக ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை  அரசாங்கம் பகிரங்கப்படுத்த  வேண்டும்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் அரசாங்கம் அதனை கருத்திற்கொள்ளாமல், சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு  உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பை திருப்திப்படுத்தும் வகையில் தான் இந்த அரசாங்கம் சட்டங்களை இயற்றுகிறது. அவ்வாறான சட்டங்கள் தற்போது அமுலில் உள்ளன. பல சட்டங்களை அவ்வாறு இயற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது முற்றிலும் நாட்டுக்கு எதிரானது.

புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்பை திருப்திப்படுத்துவதற்காகவும், நாட்டை பிளவுபடுத்தி சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமையை அமுல்படுத்தவும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான இந்த திருத்தத்துக்கு  கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37
news-image

மொரட்டுவையில் முச்சக்கர வண்டியில் பணித்த நபரை...

2026-09-10 15:23:00
news-image

யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு...

2026-09-10 15:20:22
news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட 820 கிலோ...

2026-09-10 15:21:21