பெருந்தோட்டங்கள், வடக்குப் பகுதியில் சாதனை படைக்கும் கேர் லங்கா அறக்கட்டளை!

18 Aug, 2026 | 05:33 PM
image

சமூகத்தின் தேவையுள்ள மக்களுக்கு உதவிகரம் நீட்டி, குறிப்பாக குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்திச் செயல்படும் முன்னணிச் சமூக நல அமைப்பாக கேர் லங்கா அறக்கட்டளை (Care Lanka Foundation) திகழ்கிறது. பின்தங்கிய சமூகங்களை முன்னேற்றுவதுடன், ஒவ்வொரு தனிநபரும் கண்ணியத்துடனும் நம்பிக்கையுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அர்சுனி அரவிந்தன் மற்றும் இளைஞர் குழாமினால் கடந்த 2022.08.19 அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்தொண்டு நிறுவனம், இலங்கை அரசாங்கத்தில் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் நான்கு வருட காலப்பகுதியில், 380 க்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்களை இந்நிறுவனம் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக, பெருந்தோட்டப் பகுதிகள் மற்றும் வடக்கு மாகாணப் பகுதிகளில் கல்வி, கலாசாரம், சுயதொழில் மேம்பாடு, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு ஆதரவு மற்றும் விளையாட்டுத் துறை போன்ற பல்வேறு துறைகளில் தனது சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. கல்வித்துறையின் வளர்ச்சிக்காகப் பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள் வழங்கல், மலசலகூடப் புனரமைப்பு, குடிநீர் திட்டங்களை அமைத்தல், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் வழிகாட்டல் கருத்தரங்குகளை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளது.

சுகாதாரத் துறையில், தேவையுள்ள குடும்பங்களுக்கு மருத்துவ உதவிகள், விசேட தேவையுடையோருக்குச் சக்கர நாற்காலிகள் மற்றும் இயன்மருத்துவ உபகரணங்களை வழங்குதல், பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுநீரக நோய் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்துதல் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் கோழி வளர்ப்புப் பொருட்கள், கைப்பேசி பழுதுபார்ப்பு உபகரணங்கள், மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான காளான் வளர்ப்பு உதவிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' பேரிடர் காலப்பகுதியில் சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முதியோர் இல்லங்களுக்கும் தனது சேவையை விஸ்தரித்துள்ள இலாப நோக்கற்ற மனிதநேய அமைப்பான கேர் லங்கா அறக்கட்டளை, தனது நான்காவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 19.08.2026 அன்று மிக விமரிசையாகக் கொண்டாடுகிறது.

எதிர்காலத்தில் நீண்டகால சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவான அடிதளமாக விளங்கவுள்ள கேர் லங்கா அறக்கட்டளையின் இந்தச் சேவையைப் பாராட்டி, அமைப்பில் செயற்படும் அங்கத்தவர்கள், தொண்டர்கள், நலன்விரும்பிகள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27
news-image

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆயுள் காப்புறுதிக்...

2026-09-03 10:23:42
news-image

75 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை...

2026-09-02 12:29:36