22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்

18 Aug, 2026 | 05:17 PM
image

(நமது நிருபர்)

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, SC/SD/31/2026 எனும் வழக்கு இலக்கத்தின் கீழ் இந்த மனு இன்று (18) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அதன் அரசியலமைப்புத் தன்மை மற்றும் அதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறு உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் இதுவரை 97,000க்கும் அதிகமான டெங்கு...

2026-09-14 10:26:14
news-image

பிரபல கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்!

2026-09-14 10:22:10
news-image

இலங்கைத் தொழிலதிபருக்குச் சொந்தமான சொகுசு தனியார்...

2026-09-14 09:30:42
news-image

கடும் வறட்சி: தற்காலிகமாக மூடப்படுகிறது யால...

2026-09-14 09:16:50
news-image

உடுதும்பர 'ஹீன் கங்கை'யில் மூழ்கி இளம்...

2026-09-14 09:29:38
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...

2026-09-14 09:00:56
news-image

வடக்கு கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஈ.பி.டி.பி...

2026-09-14 09:00:19
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5 கோடிக்கும்...

2026-09-14 08:51:39
news-image

சபாநாயகருக்கு எதிராக சர்வதேச அமைப்புகளிடம் தயாசிறி...

2026-09-14 06:34:40
news-image

இன்றைய வானிலை 

2026-09-14 06:25:17
news-image

அநுராதபுர பேரணி: சட்டம், நீதித்துறைக்கு எதிரான...

2026-09-14 06:23:37
news-image

கைதுகள் இடம்பெறுவதையிட்டு ஊழல்வாதிகள் அணி கலக்கமடைய...

2026-09-14 05:51:00