(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எமது ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரி விதிப்புகளையும் நீக்கிக்கொள்ள அரசாங்கத்துக்கு முடியுமாகி இருக்கிறது. தற்போது 10வீத தீர்வை வரி மாத்திரமே ஆமுலில் இருக்கிறது. இது எமது அரசாங்கம் அமெரிக்காவுடன் பேணிவரும் சிறந்த ராஜதந்திர உறவுக்கான வெற்றியாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியினால் பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு தீர்வை வரி விதிக்கப்பட்டது. அதன் பிரகாரம் எமது நாட்டுக்கு நூற்றுக்கு 44வீத தீர்வை வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிக்கப்பட்டதுடன் எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அமெரிக்காவுடன் கலந்துரையாடி இதனை நீக்கிக்கொள்ள அரசாங்கத்துக்கு முடியாது என்றும் பலரும் தெரிவித்து வந்தனர்.
ஆனால் இந்த வரி விதிக்கப்பட்டதுடன் இதுதொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாட விசேட நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார். அந்த குழு அமெரிக்காவில் இருக்கும் இலங்கை தூதரகம் ஊடாக அமெரிக்க அதிகாரிகளுடன் பல தடவைகள் நேரடியாகவும் நிகழ்நிலை ஊடாகவும் பேச்சுவாரத்தைகளை மேற்கொண்டதன் மூலம் 44வீத வரியை 30 வீதமாக குறைத்துக்கொள்ள முடியுமாகியது. பின்னர் தொடர்ந்து மேற்கொண்டுவந்த கலந்துரையாடல் மூலம் அந்த வரியை 20வீதமாக குறைத்துக்கொள்ள முடியுமாகியது.
அமெரிக்காவின் இந்த தீர்வை வரி அமுல் படுத்தப்பட்டிருந்தால், அது எமது பொருளாதாரத்துக்கு மரண அடியாக அமைந்திருக்கும். அதேநேரம் ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றிவரும் 3லட்சத்தி 50ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் தொழில் இதன் மூலம் பாதுகாக்கபட்டிருக்கிறது.
அத்துடன் இறுதியாக நீதிமன்ற உத்தரவுக்கமைய அமெரிக்கா மீண்டும் மேலதிக வரியாக 12,5 வீத வரியை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த வரி அதிகமான நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்தது. என்றாலும் இந்த வரியை குறைத்துக்கொள்ளவும் அமெரிக்காவுடன் கலந்துரையாட குழு நியமிக்கப்பட்டு, கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் 95 வீதமானவை முடிவடைந்திருக்கிறது. ஒப்பந்தத்தில் எமது இணங்க முடியுமான விடயங்களில் நாங்கள் இணங்கி இருக்கிறோம். இணங்க முடியாத விடயங்களில் முடியாது என தெரிவித்திருக்கிறோம்.
அதனால் தற்போது அமெரிக்காவினால் எமக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியில் நூற்றுக்கு 10வீத வரி மாத்திரமே எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இது எமது அரசாங்கம் கூட்டு முயற்சியாக செயற்பட்டதன் மூலம் கிடைத்த வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம். ஏனெனில் நாங்கள் அமெரிக்காவுக்கு வருடாந்தம் 2.8 பில்லியன் டொலர் வரை ஏற்றுமதி செய்கிறோம். அமெரிக்காவுடன் அரசாங்கம் மிகவும் நெருக்கமான சிறந்த ராஜதந்திர உறவை பேணிவருவதன் மூலமே இந்த வெற்றியை அடைந்துகொள்ள முடியுமாகி இருக்கிறது. அதேபோன்று அரசாங்கமம் ஐராேப்பிய ஒன்றியத்துடன் சிறந்த உறவை பேணி, ஜீ. எஸ்.பி. வரி சலுகையையும் பெற்றுக்கொள்ள தேவையான கலந்துரையாடல்களை ஆரம்பித்திருக்கிறோம் என்றார்






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM