ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027 இல் 23,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் : பிரதமர்

18 Aug, 2026 | 05:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 2027ஆம் ஆண்டில் பாடசாலை கட்டமைப்புக்கு 23,000 ஆசிரியர்களை புதிதாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில்  4,000 ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளுக்கும், ஏனைய 19,000 ஆசிரியர்கள் மாகாண பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர் என பிரதமரும் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான  ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) வாய்மூல விடைக்கான   வினாக்கள் வேளையில்  சிவஞானம் சிறீதரன் எம் பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேவையான பரீட்சைகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக மாகாண மட்டத்தில் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.

அத்துடன் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மலையக மக்களுக்காக தனியான கல்வியியல் கல்லூரியொன்றை அமைப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

அத்துடன் முன்பள்ளிகளின் ஒழுங்குமுறை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37
news-image

மொரட்டுவையில் முச்சக்கர வண்டியில் பணித்த நபரை...

2026-09-10 15:23:00
news-image

யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு...

2026-09-10 15:20:22
news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட 820 கிலோ...

2026-09-10 15:21:21