ஜெனிட்டோயூரினரி டியூபர்குளோசிஸ் எனும் சிறுநீரகத்தில் ஏற்படும் காச நோய் பாதிப்பிற்குரிய சிகிச்சை

18 Aug, 2026 | 04:54 PM
image

உலகம் முழுவதும் காச நோயால் ஆண்டுதோறும் பத்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இதில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கிறார்கள் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. காசநோய் என்பது எம்மில் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் குறி என்றுதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் காச நோய் உடலின் எந்த பாகத்தையும் தாக்கும் என்றும், இதன் அறிகுறிகள் தெரிந்தவுடன் வைத்தியரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு முழுமையான நிவாரண சிகிச்சையை தொடர வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

காசநோய் என்பது நுரையீரலை மட்டுமல்லாமல் முதுகெலும்பு, குடல் , சிறுநீரகம் என பல உறுப்புகளையும் பாதிக்கும். இதில் சிறுநீரகத்தை பாதிக்கும் காச நோயை மருத்துவ மொழியில் ஜெனிடோயூரினரி டியூபர்குளோசிஸ் என வகைப்படுத்துகிறார்கள்.

பிரத்யேக பாக்டீரியா கிருமி மூலம் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக நுரையீரல் பகுதியில் காச நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் சிகிச்சை பெற்று முழுமையான நிவாரணம் அடைந்திருந்தாலும் இவர்களில் பத்து அல்லது பதினைந்து சதவீதம் வரை சிறுநீரக காச நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உண்டு என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் சிறுநீரக காச நோய் என்பது சிறுநீரகம்- சிறுநீர்ப்பை- சிறுநீர்ப்பாதை- விதைப்பை- புராஸ்டேட் சுரப்பி -என எங்கு வேண்டுமானாலும் பாதிப்பை உண்டாக்கும். இத்தகைய பாதிப்பு ஒருவருக்கு அவருடைய நோய் எதிர்ப்பு திறன் குறையும் போது தீவிரமடைகிறது.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல், குருதி கலந்த சிறுநீர் வெளியேறுதல், கீழ்ப்பக்க முதுகு வலி, மாலை மற்றும் இரவு நேரங்களில் காய்ச்சல் ஏற்படுதல், பசியின்மை, திடீர் உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்.. அவை சிறுநீரகத்தில் காச நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானித்து, வைத்தியர்களை சந்தித்து, முறையான பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிரத்யேக சிறுநீர் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, குருதி பரிசோதனை, NAAT பரிசோதனை மரபணு பரிசோதனை IGRAs பரிசோதனை, IVG இமேஜிங் பரிசோதனை, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இவர்களுக்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சை- எண்டோஸ்கோபிக் சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை ஆகியவற்றை ஒருங்கிணைந்தோ பிரத்யேகமாக வழங்கியோ முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.

வைத்தியர் கார்த்திகேயன் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22
news-image

சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்குரிய...

2026-08-27 16:38:50
news-image

பெரிபெரல் அர்டரி டிஸீஸ் எனும் காலில்...

2026-08-26 16:35:50
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-25 16:33:02
news-image

முதுகு தண்டு வட பாதிப்பிற்கான நவீன...

2026-08-24 16:53:43
news-image

செப்டிக் என்செபலோபதி : மூளையில் ஏற்படும்...

2026-08-21 17:56:50