தடைகளை தகர்க்கும் பிரத்யேக வழிமுறை..!

18 Aug, 2026 | 04:38 PM
image

எம்மில் பலரும் திறமை இருந்தும்... வாய்ப்பு கிடைத்தும்... வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார். வேறு சிலர் திறமை குறைவாக இருந்தாலும் வாய்ப்புகள் என்பது தொடர்ச்சியாக கிடைத்து வாழ்க்கையில் முன்னேறி கொண்டிருப்பர். இவர்களை துல்லியமாக அவதானித்தால்....  தங்களுடைய கர்ம வினைகளை குறைப்பதற்கான பிரத்யேக வழிமுறையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதை காணலாம்.  உடனே எம்மில் பலரும் அது என்ன வழிமுறை? என தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

பொதுவாக நாம் பிறந்தவுடன்... எம்முடைய கர்மாவும், கர்ம வினையும் தொடங்குகிறது. இதனால்தான் ஆன்மீக முன்னோர்கள் குழந்தை பிறந்தவுடன்... பிறந்த ஓராண்டிற்குள் குலதெய்வ ஆலயத்தில் தலைமுடி காணிக்கையை செலுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். தலைமுடி காணிக்கையை செலுத்துவதன் மூலம் எம்முடைய கர்ம வினையின் வீரியத்தை குறைத்துக் கொள்கிறோம். 

சிலர் அண்டை நாடான இந்தியாவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் போது மறவாமல் திருப்பதி மற்றும் பழனி மலைக்குச் சென்று முடி காணிக்கையை செலுத்தி விட்டு, தங்களுடைய கர்ம வினையின் வீரியத்தை குறைத்துக் கொள்வர். அதன் பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெற்று முன்னேற தொடங்குவர்.

வேறு சிலர் அருகில் இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் தலத்திற்குச் சென்று, முடி காணிக்கை செலுத்தி விட்டு வந்தவுடன்... அவர்களின் காரியத்தில் சித்தி கிடைப்பதையும் அனுபவத்தில் உணர்வர்.

கர்ம வினையின் காரணமாக தடைகளை எதிர் கொண்டிருந்தால்.... அவர்கள் அருகில் இருக்கும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களிலோ அல்லது பெருமாள் ஆலயங்களிலோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு சென்று அங்குள்ள புனித தவங்களிலோ முடி காணிக்கையை செலுத்தும் போது உங்களுடைய கர்ம வினையின் வீரியம் குறையும். அதன் பிறகு உங்களுடைய வளர்ச்சியில் விதிக்கப்பட்டிருந்த மாய தடைகள் விலகி, வெற்றியை பெறுவீர்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக...

2026-09-11 17:01:21
news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21