தனித்துவமான நடிப்புத் திறன் கொண்ட நடிகர் குரு சோமசுந்தரம் - அனுமோல் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'பாரீஸ் கஃபே 'எனும் திரைப்படம்- ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை பதிவு செய்திருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் சராஜ் சீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாரீஸ் கஃபே' திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா, சாய் விக்கி, நயனா சாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜி சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். ஆந்தாலஜி பாணியிலான இந்தத் திரைப்படத்தை எல். வி. என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தண்டர் மீடியா நிறுவனம் வழங்குகிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆணவ கொலைகளுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடும் சமூக ஆளுமையான கௌசல்யா சங்கர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார். இவருடன் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் - இயக்குநர் ஜவகர் மித்ரன் ஆகியோர்களும் சிறப்பு அதிதியாக வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''ஆணவ படுகொலைக்கு எதிராக அழுத்தமான பதிவாக 'பாரீஸ் கஃபே'வை உருவாக்கி இருக்கிறோம். சினிமா என்பது வலிமை வாய்ந்த வெகுஜன ஆயுதம் என்பதால்.. இத்தகைய விடயத்தை திரையில் விவரித்திருக்கிறோம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கே அற்புதமான பங்களிப்பை வழங்கி ரசிகர்களுக்கு வித்தியாசமான இசை அனுபவத்தை அளித்திருக்கிறார்'' என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM