கண்டி - பதீயத்தலாவ வீதியில் விபத்து ; முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழப்பு

Published By: P. Saranya

18 Aug, 2026 | 04:33 PM
image

(நமது நிருபர்)

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - பதீயத்தலாவ வீதியில், வெல்லேதொட்ட பகுதியில் ஜீப் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (17) கண்டியில் இருந்து பதீயத்தலாவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், எதிர்த்திசையில் வந்த ஜீப் வாகனமும் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் மெதமஹனுவர பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்த மேலும் இரண்டு பெண் பயணிகள் படுகாயமடைந்து கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக ஜீப் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அரசியல் களத்தில் சூடுபிடிக்கும் இரண்டு...

2026-09-11 16:31:59
news-image

இன்றைய வானிலை

2026-09-12 08:04:51
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடம்: நிதி...

2026-09-12 06:25:33
news-image

மகன் என்பதால் நாமல் ராஜபக்ஷவால் ஒருபோதும்...

2026-09-12 06:23:42
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தை திருக்கோவிலில்...

2026-09-12 06:13:45
news-image

மழையால் மின் உற்பத்திச் செலவு குறைவு:...

2026-09-12 06:11:26
news-image

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் ஷிரான்...

2026-09-12 06:07:38
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம்: கோரிக்கைகள்...

2026-09-12 03:13:43
news-image

200 ஆண்டுகளாக முகவரியின்றி வாழ்ந்த மலையக...

2026-09-11 14:21:54
news-image

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை கோரி...

2026-09-11 16:21:56
news-image

வெளிநாட்டுத் தொழிலாளர் இழப்பீடு 14 இலட்சம்...

2026-09-11 14:34:03
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம்...

2026-09-11 15:21:22