ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – அஜித் பி. பெரேரா

Published By: P. Saranya

18 Aug, 2026 | 04:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிப்பதால் நிலுவையில்  உள்ள வழக்குகள் விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட முடியாது. எதிர்வரும் டிசம்பர் மாதம்  பதவியில் இருந்து ஓய்வுப்பெறவிருந்த பிரதம நீதியசருக்கு மேலதிக காலவகாசம் வழங்குவதற்காகவே 22 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு தனிநபரை  அடிப்படையாகக் கொண்டு நீதித்துறையில் மாற்றம் ஏற்படுத்துவது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என  ஐக்கிய மக்கள் சக்தியின்  களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஏற்றுமதி  மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மற்றும்   நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை நீதியமைச்சர் முதலாம் வாசிப்புக்காக  சபைக்கு சமர்ப்பித்தார். இவ்விரு சட்டமூலங்களிலும் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை சுட்டிக்காட்டியும் அதனை நீதியமைச்சர் கருத்திற் கொள்ளவில்லை.

 ஜனாதிபதிக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது 22 ஆவது திருத்தச் சட்டத்தால் நீதித்துறைக்கு ஏற்படும் பாதிப்பை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதிக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.இந்த சந்திப்பின்போது சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி முறையாக பதிலளிக்கவில்லை.மாறாக நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களையே குறிப்பிட்டார்.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை  அதிகரிப்பதால் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக விசாரணைக்கு எடுத்துக்  கொள்ளப்படாது. வழக்குகளை விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளும் பிரிவுகளுக்கான ஆளணி மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டும்.   ஆனால் அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம்  முன்னெடுக்கவில்லை.

பொதுக்கொள்கைக்கு அமைய நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை. தற்போதைய பிரதம நீதியரசர்  சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் சேவையில் இருந்து ஓய்வுப்பெற வேண்டும். அவரை தொடர்ந்து பதவியில் வைத்துக் கொள்வதற்காகவே  2 ஆண்டுகால பதவி நீடிப்பு வழங்கப்படுகிறது.

தற்போதைய பிரதம நீதியரசரை மாத்திரம் நம்பி நீதித்துறை இருக்கவில்லை.அவர் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்றால் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் பிறிதொருவரை பிரதம நீதியரசராக ஜனாதிபதி நியமிக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யாமல் தற்போது பதவியில் உள்ளவருக்காக அரசியலமைப்பை திருத்தம் செய்வது தவறான எடுத்துக்காட்டாகும்.இது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகள் ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் கத்தோலிக்க மதத் தலைவர்கள்

2026-09-10 19:13:41
news-image

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல்...

2026-09-10 19:03:31
news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37
news-image

மொரட்டுவையில் முச்சக்கர வண்டியில் பணித்த நபரை...

2026-09-10 15:23:00