(க.சிவலிங்கமூர்த்தி)
எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் அரசாங்கத்தின் தவறுகள், சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சி ஆகியவை குறித்து கடுமையாக விமர்சித்த அநுர குமார திசாநாயக்க, அரசியல் களத்தில் தென்படாமல் இருப்பது மற்றும் அவரது மௌனம் கவலையளிப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சி தெரிவித்துள்ளது.
மகரகம பிரதேசத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் அரசாங்கத்தின் தவறுகள், சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சி ஆகியவை குறித்து கடுமையாக விமர்சித்த அநுர குமார திசாநாயக்க, இன்று அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா என்று சந்தேகிக்கத்தக்க வகையில் காணாமல் போயுள்ளார்.
இன்று நாட்டில் எதிர்க்கட்சியில் அத்தகையதொரு வலுவான குரல் கேட்காமல் இருப்பதும் அநுரவின் அரசியல் ஓய்வும் பெரும் கவலையளிக்கிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது. தடம் அறிவியல் அறிக்கைகள் தாமதமாவது, பொலிஸாரிடம் போதிய வசதிகள் இல்லாதது மற்றும் கீழ் நீதிமன்றங்களில் நிலவும் 140க்கும் மேற்பட்ட பணியாளர் பற்றாக்குறையே வழக்குத் தாமதத்துக்கு முக்கிய காரணங்களாகும்.
இவற்றை நிவர்த்தி செய்யாமல் 'திருடர்களைப் பிடிப்போம்' என்ற விளம்பரத்தின் பின்னணியில், பிராந்திய மேல் முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்கும் அதிகாரத்தைப் பெற ஆட்சியாளர்கள் சூழ்ச்சி செய்கின்றனர்.
இது வடக்கிலும் கிழக்கிலும் அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டைப் பிரிக்கும் சமஷ்டி அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான திட்டமிட்ட முயற்சியாகும். அநுர எதிர்கட்சியில் இருந்தால் இதற்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்.
தேசிய மக்கள் சக்திக்குள்ளும் ஜனநாயகம் இல்லை. மத்திய வங்கி நாட்டின் எதிர்காலப் பொருளாதாரம் ஆபத்தில் இருப்பதாக எச்சரித்துள்ள நிலையிலும், மக்கள் உணவின்றித் தவிக்கும் சூழலிலும் அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முறியடிக்க நாம் இறுதிவரை போராடுவோம் என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM