பிர­தான இரண்டு கட்­சி­க­ளையும் எதிர்க்கும் மூன்­றா­வது  அர­சியல் சக்­தி­யாக உரு­வா­வதே எமது  பிர­தான நோக்கம் என்று அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் சூளு­ரைத்த  ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் முன்னாள் அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவிற்கும் அழைப்பு விடுத்­தனர். 

அடுத்த ஆண்டு ஜன­வ­ரியில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் சகல பகு­தி­யிலும் நாம் போட்­டி­யிட்டு எமது பலத்­தினை நிரூ­பிப்போம் எனவும் அவர்கள்  தெரி­வித்­தனர்.

நேற்­றைய தினம் ஐக்­கிய சுதந்­திர  முன்­னணி என்ற கட்சி தனது அங்­கு­ரார்ப்­ப­ணத்­தினை செய்­து­கொண்டு முதல் செய்­தி­யாளர் சந்­திப்­பினை கொழும்பில் நடத்­தி­யது. இதில் கருத்து தெரி­வித்த போதே அதன் பிர­தி­நி­திகள்  மேற்­கண்­ட­வாறு கருத்து வெளி­யிட்­டனர்.  

ஐக்­கிய சுதந்திர முன்­ன­ணியின் தலைவர் உபுல் அம­ர­சிறி ஊடக சந்­திப்பில் கருத்து கூறு­கையில், 

நாட்டின் இன்­றைய தேவை கரு­தியும் மக்­க­ளுக்­கான பலம்­வாய்ந்த சக்தி ஒன்­றினை உரு­வாக்க வேண்டும் என்ற பிர­தான கார­ணத்தை நோக்­க­மாக வைத்தும்  புதிய அர­சியல் கட்­சி­யாக நாம் இன்று உரு­வா­கி­யுள்ளோம். இன்று சமூ­கத்தில் பாரிய நெருக்­க­டிகள் மற்றும் அர­சியல் தளம்பல் நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. பிர­தான இரண்டு கட்­சி­களும் மக்­களின் நம்­பிக்­கை­யினை இழந்­துள்­ளன. உறு­தித்­தன்­மை­யற்ற ஒரு போக்கு இன்று நாட்டில் நில­வு­கின்­றது. சமூக ரீதியில் பாரிய நெருக்­கடி, பொரு­ளா­தார சிக்கல் நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் நாம் புதிய மாற்றம் ஒன்­றினை உரு­வாக்கும் நோக்­கத்தில் உள்ளோம். 

அத்­துடன் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நாட்டில் சட்டம் சுயா­தீ­ன­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. அதனை நாம் மறுக்­க­வில்லை. எனினும் ஊழல் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டாது தப்­பு­வது ஏற்­று­க்கொள்ள முடி­யாத விட­ய­மாகும். ஆகவே ஊழல், கொள்ளை உள்­ளிட்ட அனைத்து குற்­றங்­க­ளுக்கும் எதி­ராக நாம் போரா­டுவோம். மேலும் இலங்கை அர­சாங்கம் பல்­வேறு சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களை செய்­துள்­ளது. அவற்றை நாம் மீறப்­போ­வ­தில்லை. இந்த நாட்டின் மக்கள் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வது அவ­சியம். அதேபோல் இந்த நாட்டின் ஜீவ­ரா­சி­களும் இயற்­கையும் பாது­காக்­கப்­பட வேண்டும். அதனை கருத்தில் கொண்டு அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுப்போம். 

கல்வி, சுகா­தாரம் உள்­ளிட்ட மக்­களின் அடிப்­படை தேவை­களை பெற்றுக் கொடுக்க மக்­க­ளுக்­கான அழுத்­தங்­களை நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­துவோம். பெண்­களின் பாது­காப்பு அவ­சி­ய­மான ஒன்­றாகும். பெண்கள்  மூலம் நாட்டின் வரு­மா­னத்தில் பெற்­றுக்­கொள்ள நினைக்கும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு நகர்­வு­களை நாம் கண்­டிக்­கின்றோம். பெண்­களின் உரி­மை­களை பாது­காக்கும் அதே நிலையில் அவர்­களை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி கஷ்­டப்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நாம் போரா­டுவோம். நாம் நான்கு வர்­ணங்­களை எமது கட்சிக் கொடியில்  உள்­ள­டக்­கி­யுள்ளோம், வாழைப்­பழ சீப்பு சின்­னமே எமக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. சுயா­தீ­ன­மாக நாட்டை நேசிக்கும் அனை­வ­ருக்கும் கட்­சியில் இடம் வழங்­கி­யுள்ளோம். எமது கட்­சியின் பலம் சுயா­தீ­ன­மான செயற்­பா­டாகும். ஆகவே ஊழல், குற்­ற­வா­ளிகள் இல்­லாத நபர்கள் எம்­முடன் கைகோர்த்து நாட்­டினை முன்­னெ­டுக்க இணை­யலாம்  என்றார்.  

கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் மைத்­திரி குண­ரத்ன கருத்து தெரி­விக்­கையில், 

நாட்டின் மிகவும் தேவை­யான ஒரு சந்­தர்ப்­பத்தில் நாம் எமது அர­சியல் பய­ணத்­தினை முன்­னெ­டுத்­துள்ளோம். இன்று நாட்டின் பிர­தான இரண்டு கட்­சி­களும் சோர்­வ­டைந்து மக்­களின் வெறுப்­பினை சம்­பா­தித்து வரு­கின்­றன. ஆகவே இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி நாம் மூன்­றா­வது சக்­தியை உரு­வாக்­குவோம். இந்த நாட்டின் மக்கள் பலத்­தினை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக மாற்றம் பெற்று அதன் மூல­மாக ஆட்­சி­யினை தீர்­மா­னிக்கும் கட்­சி­யா­குவோம். அடுத்த ஆண்டு ஜன­வ­ரியில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் சகல பகு­தி­யிலும் நாம் போட்­டி­யிட்டு எமது பலத்­தினை நிரூ­பிப்போம். இப்­போது தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. அதனை நாம் வர­வேற்­கின்றோம். இது­வ­ரையில் நாட்டில் ஊழல் மிக்க தேர்­தலில் மக்­களின் பிர­தி­நி­திகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டனர். ஆனால் இப்­போது இடம்­பெறும் புதிய தேர்தல் முறை­மையில் மக்களின் விருப்பை பெற்ற தகுதியான நபர் வெற்றிபெற்று மக்கள் சேவையினை முன்னெடுக்க முடியும். 

கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீங்கள் வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கியுள்ளீர்கள், விஜயதாச ராஜபக் ஷவை இணைத்துக்கொள்ள தீர்மானம் உள்ளதா?

பதில்:- விஜயதாச ராஜபக் ஷ விரும்பினால் எம்முடன் இணைந்து அவரது நியாயமான போராட்டத்தை  முன்னெடுக்க முடியும். அவரை நாம் நிராகரிக்கவில்லை என்றார்.