அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு பேய் அல்ல ; நீதித்துறையின் சுதந்திரத்துக்கும், சுயாதீனத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது - நீதியமைச்சர்

18 Aug, 2026 | 03:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு பேய் அல்ல, போலியான குற்றச்சாட்டுக்கள், திரிபுப்படுத்தப்பட்ட விடயங்கள் மற்றும் சுய நலன்களால் இந்த திருத்தம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஒரு தரப்பினர் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்துள்ளார்கள். ஆகவே அச்சமடையும் அளவுக்கு 22 ஆம் திருத்தம் கறுப்பு பேய் அல்ல, இந்த திருத்தத்தால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும், சுயாதீனத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

2025.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நீதிவான் நீதிமன்றங்களில் 7 இலட்சத்து 53,093 வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்களில் 2 இலட்சத்து 63,472 வழக்குகள், மேல் நீதிமன்றங்களில் 28,134 வழக்குகள்,சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 6,763 வழக்குகள், வாணிப மேல் நீதிமன்றத்தில் 4,02 வழக்குகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 5,038 வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் 4,724 வழக்குகள் என்ற அடிப்படையில் நீதிமன்ற கட்டமைப்பில் மொத்தமாக 10 இலட்சத்து 65,256 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு ஒரு தரப்பினர் தவறான விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து தீர்மானத்தின் காரணத்தை தெளிவுப்படுத்தினோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடையதாக அமைந்தால் அதனை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டு மகாநாயக்க தேரர்கள் ஆசிர்வாதமளித்தார்கள்.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஒரு தரப்பினர் சர்வதேச அமைப்புகளுக்கும் தவறான விடயங்களையே முன்வைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையில் விசேட பிரதிநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்போ, பிரான்ஸ் சட்டத்தரணிகள் சங்கமோ நீதியமைச்சுக்கு கடிதம் அனுப்பவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடைய வகையில் சட்டமியற்றும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு. அது இராச்சியத்தின் பொறுப்பாகும், அது மக்களின் அபிலாசையாகும்.

தமக்கு எதிரான வழக்கை நீதிபதிகள் எவ்வாறு விசாரிப்பது என்று எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் தர்க்கம் பொருத்தமற்றது. நீதிபதிகளுக்கு எதிராக வழக்கையே குற்றஞ்சாட்டப்பட்ட நீதிபதி விசாரிக்க முடியாது. 22 ஆம் திருத்தம் நீதிபதிக்கு எதிரான திருத்தம் அல்ல, அரசியலமைப்பின் 121 மற்றும் 125 பிரிவுகளுக்கு அமைய அரசியலமைப்பு மற்றும் சட்டமூலங்களை உயர்நீதிமன்றில் பொருட்கோடல் செய்ய முடியும்.அதற்கமைய அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாட்டு மக்கள் எவரும் உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தலாம். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தை முறையாக செயற்படுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் கத்தோலிக்க மதத் தலைவர்கள்

2026-09-10 19:13:41
news-image

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல்...

2026-09-10 19:03:31
news-image

ஜனாதிபதியை சந்தித்த இந்து குருமார்கள் ;...

2026-09-10 19:37:32
news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37