கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாடசாலைகளை நிர்மாணிக்க முன்வந்துள்ளார் பிரபல பாடகி ஷகீரா

Published By: Digital Desk 3

18 Aug, 2026 | 03:25 PM
image

கடந்த வாரம் கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூமியதிர்ச்சியால் நிலைகுலைந்துள்ள மேற்கத்திய மாகாணமான சொக்கோவில் சேதமடைந்த கல்வி நிலையங்களைச் சீரமைக்கும் வகையில், குறைந்தது 10 புதிய பாடசாலைகளை  நிர்மாணிக்க உதவப்போவதாகப் புகழ்பெற்ற அந்நாட்டு பாடகி ஷகீரா உறுதியளித்துள்ளார்.

திங்கட்கிழமை (17) சொக்கோ மாகாணத்தின் தலைநகரான கிப்டோவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள ஷகீரா, பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை நேரில் பார்வையிட்டு மாணவர்களைக் கட்டித்தழுவி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

"இந்த அவசரநிலை முடிந்தவுடன் பாடசாலைகள் மீளக் கட்டியெழுப்பப்படாமல் போகுமோ என்பதே எனது முதன்மை கவலை. சிறுவர்கள்  பாடசாலைக்குச் செல்லாத ஒவ்வொரு நாளும், அவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழக்கும் நாளாகும்" என ஊடகவியலாளர்களிடம் ஷகீரா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஷகீராவின் 'பியஸ் டெஸ்கால்சோஸ்' அறக்கட்டளையுடன் இணைந்து தொழிலதிபர் ஹெவார்ட் பஃபெட்டின் அறக்கட்டளை, 'குளோபல் சிட்டிசன்' மற்றும் 'லைவ் நேஷன்' ஆகிய அமைப்புகள் தலா 500,000 அமெரிக்க டொலர்களை இத்திட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 10 ஆம் திகதி கொலம்பியாவின் மேற்கில் ஏற்பட்ட 7.4 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியால் இதுவரை 287 பேர் உயிரிழந்துள்ளதோடு,  26,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

பூமியதிர்ச்சியின் மையப்பகுதியாக அமைந்த சொக்கோ மாகாணத்தில் மாத்திரம் 265 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,100 க்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

பிரெஞ்ச் சுவிட்சர்லாந்தின் அளவிற்குப் பரப்பளவு கொண்ட இம்மாகாணம் ஆப்ரோ-கொலம்பிய மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் மிகவும் ஏழ்மையான பகுதியாகும்.

"கொலம்பியாவின் வரலாற்று ரீதியாகக் கைவிடப்பட்ட இப்பகுதியை நாங்கள் கைவிட மாட்டோம்; ஒவ்வொரு சிறுவரும் மீண்டும் பாடசாலைக்கு சென்று தங்கள் கனவுகளைத் தொடரும் வரை எங்கள் அர்ப்பணிப்பு தொடரும்" என ஷகீரா உறுதியளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50
news-image

இந்தோனேசியாவில் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

2026-09-08 10:10:53
news-image

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக...

2026-09-08 09:37:44
news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43