இலங்கை - லிதுவேனியா இடையிலான 30 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் நிறைவு : விசேட நிகழ்வுகள் முன்னெடுப்பு

18 Aug, 2026 | 02:34 PM
image

இலங்கைக்கும் லிதுவேனியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை  சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.  

இலங்கைக்கும் லிதுவேனியா குடியரசிற்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் 1996 ஆகஸ்ட் 20 அன்று ஆரம்பமாகியிருந்தது.

இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான 30 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பரஸ்பர, சுற்றுலா, கல்வி, வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரப் பகிர்வு ஆகிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.  

இலங்கைக்கான லிதுவேனிய தூதுவர் டயானா மிகேவிச்சீனே விடுத்துள்ள செய்தியில்,

இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புறவு நீண்ட காலமானது. இலங்கையின் தேசியக் கொடியின் நிறங்கள் மற்றும் கண்டி அம்பிட்டிய தேவாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சொரூபத்தின் மாதிரி போன்ற ஆன்மீக மற்றும் கலாசார பிணைப்புகள் நீண்டகால இருதரப்பு உறவினை உறுதி செய்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், லிதுவேனியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஆர்.எம்.மணிவண்ணன், சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றில் லிதுவேனியாவின் நவீன வளர்ச்சியையும், இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் கலாசார வளங்களையும் இணைத்து இரு நாடுகளும் இணைந்து செயற்பட சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10